தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிள்ளை பாசத்தால் உதயநிதிக்குப் பதவி! - பொள்ளாச்சி ஜெயராமன் சுசகம் - coimbatore pollachi government function

கோயம்புத்தூர்: ஸ்டாலின் பிள்ளைப் பாசத்தால் திமுகவில் உதயநிதிக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன்

By

Published : Nov 18, 2019, 4:14 AM IST

பொள்ளாச்சி அருகே உள்ள சேரன் நகரில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா, நெகமம் பகுதியில் வேளாண் விரிவாக்கக் கட்டட திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “1972இல் திமுக தலைவராக இருந்த கலைஞர் தனது மகன் மு.க முத்து மீது உள்ள பிள்ளைப் பாசத்தால் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு அதிமுக உருவானது. அதேபோல் இன்று கலைஞர் இல்லாத நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தன் மகன் மீது உள்ள பிள்ளைப் பாசத்தால் உதயநிதி ஸ்டாலினுக்குப் பதவி வழங்கியுள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பு

அன்றைக்கும் திமுக-வில் “பிள்ளையோ பிள்ளை இன்றைக்கும் பிள்ளையோ பிள்ளை” பிள்ளைப் பாசம் தமிழ்நாட்டில் இனி எடுபடாது. இதனால் அக்கட்சியில் விரைவில் பிளவு ஏற்படும். உண்மையான விசுவாசமான தொண்டர்கள் அதிமுக பக்கம் வருவார்கள்” என்று அவர் கூறினார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details