தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நியூசிலாந்தில் வேலை... லட்சக்கணக்கில் மோசடி...ஒருவர் கைது - நியூசிலாந்தில் வேலையென

நியூசிலாந்தில் வேலை வாங்கி தருவதாக, 44 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்தவரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 18, 2022, 6:17 AM IST

கோவை: தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(29) என்பவர் கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் வசித்து வருகிறார். தமிழ்ச்செல்வன் பீளமேடு அண்ணாநகரில் பகுதியில் எஸ்.டி.குளோபல் பிளேஸ்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆன்லைன் மூலமும் இந்த நிறுவனம் தொடர்பான தகவல்களை வெளியிட்டார். வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்ப எந்த அனுமதியும் இவர் பெறாத நிலையில், நியூசிலாந்து நாட்டுக்கு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த ஆன்லைன் அறிவிப்பை நம்பிய மதுரை , தூத்துக்குடி , திருநெல்வேலி , புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலரும், தமிழ்ச்செல்வனை தொடர்புகொண்டனர். அவர்களிடம் இவர் முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் என பணம் வசூலித்துள்ளார். மேலும், அவர்களது பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக்கொண்டார்.

பணம் செலுத்தியவர்கள் நம்புவதற்காக வேலை கிடைத்ததற்கான போலி கடிதத்தை தயாரித்து அனுப்பியுள்ளார். விமான டிக்கெட்டுகளையும் எடுத்து அதன் காப்பியையும் அனுப்பி கூடுதலாக பணம் வசூலித்துள்ளார். அதன் பின்னர் விமான டிக்கெட்டை ரத்து செய்துவிடுவார். விமான டிக்கெட் வந்துவிட்டது; வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பலரும் பணம் செலுத்தியுள்ளனர்.

மதுரை செல்லூரைச் சேர்ந்த விஜயன் என்பவர் பணம் கட்டியும் வேலை கிடைக்காததால், கோவை வந்து விசாரித்தபோதுதான், தமிழ்ச்செல்வன் மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கோவை நகர குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர் புகார் செய்தார். இதேபோல், நேற்று (நவ.17) மட்டும் 16 பேர் புகார் அளித்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், தமிழ்ச்செல்வனின் அலுவலகத்தில் பலரிடமிருந்தும் வாங்கி வைத்திருந்த 44 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத்த்தொடர்ந்து, தமிழ்ச்செல்வன் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். தற்போது 16 பேர் மட்டும் ரூ.17 லட்சம் அளவுக்கு பணத்தை இழந்துள்ளதாக புகார் செய்துள்ளனர். இவ்வாறு, இவர் 44 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிறுநீர் கலந்த உணவு - காதலை நம்பி கொல்கத்தா சென்ற ஈரோடு பெண்ணுக்கு கொடுமை!

ABOUT THE AUTHOR

...view details