கோவை மாவட்டம் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் - சரஸ்வதி தம்பதி, தங்களுக்கு அரசு சார்பில் வீடு ஒதுக்கி தர வேண்டும் எனக்கோரி அம்மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று (டிசம்பர் 7) மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் தனது மகனும் மருமகளும் உயிரிழந்த நிலையில் 3 வயது பேரன் கடும் காயங்களுடன் உயிர் தப்பினான். ஆனால் விபத்தில் பேரனுக்கு இடுப்பிற்கு கீழ் செயலிழந்து விட்டது.
மாற்றுத்திறனாளி பேரனுடன் உதவிக்கு காத்திருக்கும் முதியவர் - மனு
கோவை : வயது முதிர்வின் காரணமாக, தனது மனைவி, மாற்றுத்திறனாளி பேரனை கவனித்துக்கொள்ள முடியாததால், தனக்கு அரசு சார்பில் வீடு ஒதுக்கி தர வேண்டும் என கோவையைச் சேர்ந்த முதியவர் அம்மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது வாடகை வீட்டில் வசித்துவரும் தாங்கள், பேரனையும் கவனித்துவருகிறோம். வயது முதிர்வின் காரணமாக வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம். பேரன் இயற்கை உபாதைகளை கழிக்கும்போது வீட்டின் உரிமையாளர்கள் வீடுகளை காலி செய்யுமாறு நிர்பந்திப்பதால் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்துவிட்டோம். எனவே தங்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒதுக்கி தர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பட்டா கேட்டு புகார்.. பஞ்சாயத்துக்காரர்களின் மிரட்டல்