தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உடை மாற்றும் வீடியோவை யூடியூப் சேனலில் பதிவிட்ட 3 பேர் கைது - coimbatore petrol bulk ladies dress changing video issue

கோவை: பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பெண் ஒருவர் உடைமாற்றும் வீடியோவை சென்சார் செய்யாமல் யூடியூப் சேனலில் செய்தியாகப் பதிவிட்டவரையும் அதற்கு துணையாக இருந்தவர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை பெட்ரோல் பங்க் பெண்கள் உடைமாற்றும் வீடியோ  கோவை பெட்ரோல் பங்க்  coimbatore petrol bulk ladies dress changing video issue  கோவை குற்றச் செய்திகள்
பெண்கள் உடை மாற்றும் வீடியோவை யூடியூப் சேனலில் பதிவிட்டவர் உட்பட 3 பேர் கைது

By

Published : Jan 8, 2020, 10:14 PM IST

கடந்த ஆறாம் தேதி கோவை எருக்கம்பெனி பகுதியில் இயங்கிவரும் ரூட் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பெண் ஒருவர் உடைமாற்றுவதை அதே பெட்ரோல் பங்கில் வேலைபார்த்தவர் படம்பிடித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சக ஊழியரான மணிகண்டன் காவல் துறையிடம் புகாரளித்தார்.

இதனைத் தொடர்ந்து, புகாரளித்த மணிகண்டனை அந்த பெட்ரோல் பங்க் மேலாளர் சங்கர் கணேஷ், கவிதாசன், சரவணனன் ஆகியோர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்செயல் குறித்து மணிகண்டன் ஊடகங்களிலும் பேட்டியளித்துள்ளார்.

இச்சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த வீடியோவானது கோவை மீடியா யூடியூப் சேனலில் சென்சார் செய்யாமல் பதிவிடப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் காவல் துறையினரிடமும் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களிடமும் புகாரளித்தனர். அதன் பின்பு சமூக வலைதளங்களிலிருந்து அந்தப் பதிவானது நீக்கப்பட்டது.

இந்த வீடியோவை எடுத்த சுபாஷ் என்பவரிடமிருந்து பெற்று தனது யூடியூப் சேனலான கோவை மீடியாவில் பதிவிட்ட மருதாச்சலம், அதற்கு துணையாக இருந்த மணிகண்டன், சுபாஷ் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: மனைவி துணி மாற்றுவதை படம் பிடித்தவர் மீது புகார் அளித்த கணவர் மீது தாக்குதல்!

ABOUT THE AUTHOR

...view details