தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைனில் நடக்கும் மாணவர் சேர்க்கை... கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் அறிமுகம்! - tamil latest news

கோவை: மாநகராட்சி பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதியை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் அறிமுகப்படுத்தியுள்ளார்.

மாணவர்
மாணவர்

By

Published : May 22, 2020, 4:18 PM IST

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 16 மேல்நிலைப்பள்ளிகள், 11 உயர் நிலைப்பள்ளிகள், 1 நடுநிலைப் பள்ளி, 13 உயர் தொடக்கப் பள்ளிகள், 42 ஆரம்பப் பள்ளிகள், காதுகேளாதோருக்கான 1 உயர் நிலைப்பள்ளி என மொத்தம் 84 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இதுவரை மாணவர்கள் சேர்க்கை இப்பள்ளிகளில் தான் நேரடியாக நடைபெற்று வந்தது. ஆனால், 2020-21ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை ஆன்லைன் வழியில் நடத்தும் புதிய திட்டத்தை கோவை மாநகராட்சி ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காகhttp://forms.gle/9caEWry7YaW679xG6என்ற இணைய லிங்க் மற்றும் 9842951127, 9442075067 என்கிற தொலைபேசி எண்களை அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் வெளியிட்ட அறிக்கையில், "பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க இணைய லிங்க் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பெற்றோர்கள் லிங்க் மூலம் மாணவர் சேர்க்கைக்கான விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு, மாணவர்களை விருப்பப்பட்ட பள்ளிகளில் சேர்க்கலாம்.

அதே போல், தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். கரோனா வைரஸால் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வசதி பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை ஒத்திவையுங்கள் - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

ABOUT THE AUTHOR

...view details