லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஆறு பயங்கரவாதிகள் கோவையில் நுழைந்துள்ளதாக நேற்று வெளியான தகவலையடுத்து, மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி, சோதனையில் ஈடுபட்டனர். இதனால் கோவை முழுவதும் பரபரப்பு நிலவியது.
கோவை ரயில் நிலையத்தில் போலீஸார் தீவிர சோதனை - terror treat to coimbatore
கோயம்புத்தூர்: பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக கோவை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் மீண்டும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
![கோவை ரயில் நிலையத்தில் போலீஸார் தீவிர சோதனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4227233-thumbnail-3x2-coimbatore.jpg)
coimbatore railway station
கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதையில் ஈடுபடும் காவல்துறையினர்
இதனிடையே, இன்று காலை எதிர்பார்ப்புகளுக்கு மாறாக கோவையில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் இயல்புநிலை திரும்பியது. ஆனால், தற்போது கோவை ரயில்நிலையத்தில் காவல்துறையினர் மீண்டும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களோடு வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
TAGGED:
Coimbatore on high alert