கோவை மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குனியமுத்தூர், ஆத்துப்பாலம், போத்தனூர் ஆகியப் பகுதியில் செல்லும் ஆற்றில் நீர் வரத்து அதிகமானது. இதனால் போத்தனூர் - ஜம்ஜம் நகர்ப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியினுள் நீர் புகுந்தது.
வீட்டுப் பொருட்கள் வெள்ள நீரில் மிதந்தன. மேலும் சாய் நகரில் 5 தெருக்களில் நீர் நிரம்பி காணப்படுகிறது. அதன் பின் மாநகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். எதிர்பாராத இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தாலும், குடியிருப்புப் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.