கோயம்புத்தூர்: டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
இது தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் உக்கடம் ஜிஎம் நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சல்கான் ஆகிய 5 பேரை என்ஐஏ அதிகாரிகள் இன்று (டிச. 25) காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.