தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிக்க பணம் தராததால் பெற்றோர்களை கொன்ற மகன்

கோவை: வெள்ளிமலை பட்டின பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர், குடிக்க பணம் தராததால் தனது தாய், தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Feb 8, 2020, 6:52 PM IST

கோவையை அடுத்த வெள்ளிமலை பட்டினம் பகுதியில் வசித்துவந்தவர் சுந்தரம் ( வயது 75), இவருடைய மனைவி துளசி (70,) கூலிவேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கார்த்தி என்ற மகனும், மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர்.மகன் கார்த்திக் குடிபோதைக்கு அடிமையானதால் அடிக்கடி தாய், தந்தையிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை குடிக்க பணம் கேட்டு கார்த்திக் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால், பெற்றோர்கள் பணம் தர மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் இன்று அதிகாலை 1 மணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெற்றோரை குடிபோதையில் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது சுந்தரம், துளசி இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். அருகில் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளும் கிடந்தது. உடலை கைப்பற்றிய காவல் துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் பெற்றோரை கொலை செய்த மகனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். குடிக்க பணம் தராததால் பெற்றோரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:புழல் சிறையிலிருந்து டாஸ்மாக் ஊழியரை மிரட்டிய கைதி

ABOUT THE AUTHOR

...view details