தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பரிசு வழங்கும் விழா - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்பு - Coimbatore Pongal prize giving ceremony

கோவை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்.

பொங்கல் பரிசு வழங்கும் விழா
பொங்கல் பரிசு வழங்கும் விழா

By

Published : Jan 10, 2020, 4:17 PM IST

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கிவைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, "உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஏலக்காய், கரும்பு, வேட்டி சேலை, இதனுடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

பொங்கல் பரிசு வழங்கும் விழா

மேலும், தமிழ்நாடு அரசானது கோவை மாவட்டத்திற்கு மட்டும் பொங்கல் பரிசுக்காக 130 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: ரூ.1000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை தொடங்கி வைத்த முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details