தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனி நம்ம ஆட்கள் வசூல் செய்வார்கள்.. கோவை மேயர் கணவரின் ஆடியோ - coimbatore district news

இனிமேல் நம்ம ஆட்கள் வசூல் செய்வார்கள். நீங்கள் வசூல் செய்ய வேண்டாம் என கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்த்குமார் பேசும் செல்போன் ஆடியோ வைரலாகிவருகிறது.

கோவை மேயர் கணவரின் ஆடியோ
கோவை மேயர் கணவரின் ஆடியோ

By

Published : Aug 9, 2022, 9:05 PM IST

கோயம்புத்தூர்: மேயர் கல்பனா கணவர் ஆனந்தகுமார் மணியக்காரன் பாளையம் அருகே உள்ள கோயில் சந்தையில் இனிமேல் நாங்களே வசூல் செய்து கொள்கிறோம் என தெரிவித்ததாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில் குமார் மற்றும் சம்பத் என்பவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஆனந்த்குமார் கான்பிரன்ஸ் காலில் வந்தது போலவும் அதில் ஆனந்த் குமார் அடுத்த வாரத்தில் இருந்து நம்முடைய ஆட்களே சந்தை கடையில் வசூல் பண்ணி கொள்வார்கள் என தெரிவிக்கிறார். எதிர் திசையில் பேசிய சம்பத் கோயில் கமிட்டியில் பேசிக்கோங்க எனவும் அதற்கு ஆனந்தகுமார் கோயில் கமிட்டியில் நாங்கள் பேசிக் கொள்கிறோம் என்றார்.

கோவை மேயர் கணவரின் ஆடியோ

சனிக்கிழமை நீங்கள் வசூல் பண்ண வேண்டாம் எனவும் தெரிவித்தார். இந்த ஆடியோ தொடர்பாக திமுக தலைமை கழகத்தின் சார்பில் ஆனந்தகுமாரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க:அரசு அலுவலர்கள் புகார்களை நிலுவையில் வைக்கக்கூடாது..!' - உயர் நீதிமன்றக்கிளை

ABOUT THE AUTHOR

...view details