கோவை:கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டவுன்ஹால் பகுதியில் கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இன்று (மே 14) அதிகாலை 3 மணியளவில் கோயில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போயிருப்பதை, கோயில் காவலாளி ஒருவர் பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் கோயிலில் குவிந்தனர். பின்னர் இவை குறித்து கோயில் நிர்வாகத்தினருக்குத் தகவல் அளித்த நிலையில், அங்கு விரைந்த கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உக்கடம் போலீசார் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதையும் படிங்க:நாட்டு வெடிகுண்டு விபத்து - 10 விரல்களையும் இழந்த ரவுடியிடம் போலீஸ் விசாரணை