கோவை, சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது. இவர் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இதற்கு முன்பே தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளார். அவர், அனைத்து மதங்களின் அடையாளங்களையும் போட்டுக்கொண்டு எம்மதமும் சம்மதம் என்று உணர்த்துவதைப் போல் தேர்தல் பரப்பையில் ஈடுபட்டார்.
’வாக்களிக்காதவர்களிடமிருந்து அரசு சலுகைகளை திரும்பப் பெற வேண்டும்’ - சுயேட்சை வேட்பாளர் ஆதங்கம்! - kinathukadavu independent candidate
கோவை: வாக்களிக்காத மக்களிடமிருந்து ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு சலுகைகளை திரும்பப் பெற வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது தெரிவிக்கிறார்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 72.78 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது வருத்தம் அளிப்பதாக நூர் முகமது தெரிவித்துள்ளார். மேலும், வாக்களிக்காதவர்களின் ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும். வாக்களிக்கத் தவறியவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, 100 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வேட்பாளருக்கு எதிரான பணி; எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் நீக்கம்