கோவை: 'தி இந்து' ஆங்கில நாளிதழில் பணியாற்றி வந்த செய்தியாளர் கார்த்திக் மாதவன் (45). நேற்று முன்தினம் உத்தரகாண்ட் மாநிலம், கங்கோத்ரிக்கு 14 பேர் வேனில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் கார்த்திக் மாதவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
கார்த்திக் மாதவனின் உயிரிழப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கோவை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் அவருக்கு இரங்கல் செலுத்தப்பட்டது.
கோவை செய்தியாளர் விபத்தில் உயிரிழப்பு; மாவட்ட ஆட்சியர் இரங்கல் - district press
உத்தரகாண்ட் மாநிலத்தில் விபத்தில் உயிரிழந்த கோவை மாவட்ட செய்தியாளருக்கு பத்திரிகையாளர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
கோவை செய்தியாளர் விபத்தில் உயிரிழப்பு
இதில் கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரனும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: மோசமான வானிலை - மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானம்