கோயம்புத்தூர் மாவட்டம் சுங்கம் பாரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்ஸ் ரொசாரியோ (60). இவரது மனைவி எலிசபெத் மேரி. இவர் ஒய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன், மகள் வெளிநாட்டில் வசித்துவருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை நான்கு பேர் கொண்ட முகமூடி கும்பல் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர் தரைதளத்தில் உறங்கிக் கொண்டிருந்த பிரான்ஸ் ரொசாரியோ, எலிசபெத் மேரி இருவரையும் கட்டிப்போட்டு விட்டு, பீரோவில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.