மத்திய அரசின் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 01) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு கோவை தொழில் துறையினர் வரவேற்பு அளித்துள்ளனர். இதுகுறித்து இந்திய தொழில் வர்த்தக மையத்தின் கோவை கிளை தலைவர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், "கரோனா நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் வகையிலும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும் பட்ஜெட் உள்ளது.
அறிவிக்கப்பட்ட 7 ஜவுளி பூங்காக்களில் ஒரு ஜவுளி பூங்கா கோவையில் அமைக்க வேண்டும். சாலை வசதி, சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு குறு தொழில்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொழில் துறையினருக்கு உதவியாக இருக்கும். ஒட்டுமொத்தமாக தொழில் துறையினருக்கு சாதகமாகவும் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையிலும் இந்த பட்ஜெட் உள்ளது.