கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியாரில் சிவா என்பவர் 40 வருடங்களாக சிவா மெஸ் நடத்தி வருகிறார்.
இங்கு ஆழியார் வனப்பகுதியில் உள்ள குரங்குகளுக்கு உணவு தேடி இவர் கடைக்கு வரும்வது வழக்கம். அப்படி உணவில்லாமல் தவித்து வரும் குரங்குகளுக்கு கருணையோடு உணவு வழங்கி வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஆழியார் பகுதியில் மழை பெய்து வருவதால் குரங்கு கூட்டம் உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியவருவதில்லை.
ஆனால் ஒரு குரங்கு மட்டும் இவரது கடைக்கு தினசரி தவறாமல் வந்து உணவருந்தி செல்கின்றன. உணவில்லாமல் தவித்து வரும் ஏழைகளுக்கு இந்த சமயத்தில் உணவளித்து வரும் மனித நேயர்கள் ஒரு புறம் இருக்க உணவில்லாமல் தவிக்கும் வாயில்லா ஜீவன்களான இந்த குரங்குகளுக்கு கருணையோடு உணவு வழங்கி வரும் ஹோட்டல் உரிமையாளரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.