கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறான சூழலில் பிற நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
குறிப்பாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையை பொறுத்தவரை நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 50 என்ற எண்ணிக்கையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கரோனா காலம் என்பதால் அறுவை சிகிச்சை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதாவது தோராயமாக 20 முதல் 30 வரையிலான எண்ணிக்கையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கரோனா காலம் என்பதால் அறுவை சிகிச்சை செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மிக முக்கியமான அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறும்போது, "கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். மக்கள் பலரும் அரசு கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. முகக்கவசம் அணிந்தாலும் அதனை முறையாக அணிவதில்லை. தகுந்த இடைவெளியும் பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதில்லை.