தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம் - கோயம்புத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர்: அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலைப் பாடத்திற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை
மாணவர் சேர்க்கை

By

Published : Oct 27, 2020, 3:53 PM IST

கோயம்புத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலைப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (அக்டோபர் 27) தொடங்கியது.

கோயம்புத்தூர் கலை அறிவியல் கல்லூரியில் மொத்தம் 21 முதுகலைப் பாடப்பிரிவுகள் உள்ளன. அதில் எம்.சி.ஏ. படிப்பினைத் தவிர்த்து மீதமுள்ள 20 பாடப்பிரிவுகளுக்கான கவுன்சிலிங் நடைபெற்றுவருகிறது. மொத்தம் 552 இடங்கள் உள்ளன. இதற்கு ஆயிரத்து 999 விண்ணப்பங்கள் வரப்பட்டுள்ளன.

இன்று சிறப்புப் பிரிவு மாணவர்கள் சேர்க்கை (விளையாட்டு, என்சிசி, மாற்றுத்திறனாளிகள்) நடைபெற்றது. நாளை ( அக்டோபர் 28) பொது பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற இந்த மாணவர் சேர்க்கையில் விளையாட்டு கோட்டாவிற்கு151 பேரும், முன்னாள் படை வீரர்களின் மகன் அல்லது மகள் கோட்டாவுக்கு 13 பேரும் மாற்றுத்திறனாளிகள் கோட்டாவிற்கு 24 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் தகுந்த சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும் என்றும் இறுதி பருவ தேர்வு சான்றிதழ் இல்லாத மாணவர்கள் அவர்கள் படித்த கல்வி நிறுவனத்திடமிருந்து தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் சேர்க்கைக்கு வரும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details