கோவை அடுத்த செட்டிப்பாளையம் பந்தய திடலில் தேசிய அளவிலான பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது. இப்பந்தயம் கல்லூரிகளுக்கு இடையேயான பந்தயம், பார்முலா 4 ஆகிய இருபிரிவுகளின் கீழ் நடைபெற்றது.
கோவையில் பார்முலா 4 கார் பந்தயம்: சென்னை வீரர் முதலிடம் - coimbatore news
கோவை: செட்டிபாளையம் பந்தய திடலில் நடைபெற்ற தேசிய அளவிலான பார்முலா 4 கார் பந்தயத்தில் சென்னையை சேர்ந்த பந்தய வீரர் முதலிடம் பிடித்தார்.
coimbatore formula 4 Car race
தேசிய அளவிலான பார்முலா 4 பந்தய பிரிவில் சென்னையைச் சேர்ந்த பந்தய வீரர் ராகுல் ரங்கசாமி முதலிடம் பெற்றார். பெண்களுக்கான பார்முலா 4 பந்தய பிரிவில் குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த மிரா எர்ட் முதலிடம் பெற்றார்.
மேலும், பந்தயத் திடலில் இரு சக்கர வாகனங்களுக்கான பந்தயமும் நடைபெற்றது. இப்போட்டிகளின் இடையே சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மனதை பதபதைக்கும் இந்த சாகச நிழச்சியில் பங்கேற்ற வீரர்களில் சிலருக்கு காயங்களும் ஏற்பட்டன.