தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைரல் பெண் டிரைவர் ஷர்மிளா பணி நீக்கம் - கனிமொழியுடன் சந்தித்த நிலையில் நடவடிக்கை - coimbatore Sharmila

கோவையை கலக்கி வரும் தனியார் பெருந்து பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை நேரில் சந்தித்த எம்.பி கனிமொழி பரிசளித்து பாராட்டினார். இதனிடையே ஷர்மிளாவை பணி நீக்கம் செய்வதாக தனியார் பேருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Coimbatore
கோயம்புத்தூர்

By

Published : Jun 23, 2023, 1:20 PM IST

Updated : Jun 23, 2023, 2:51 PM IST

கோவையை கலக்கி வரும் தனியார் பெருந்து பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை நேரில் சந்தித்த எம்.பி கனிமொழி

கோயம்புத்தூர்: கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநரான 23 வயது ஷர்மிளா பயணிகள் பேருந்தை திறம்பட ஒட்டி அசத்தி வருவது தற்போது தமிழ்நாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்று காலை திமுக எம்.பி.கனிமொழி ஷர்மிளாவை சந்தித்த நிலையில், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, பிரச்சனைக்கு காரணமே பேருந்தில் புதிதாக பணிக்கு சேர்ந்துள்ள பெண் நடத்துநர் தான் எனக் கூறினார். அவர் பேசிய விதம் மனதை உளைச்சலாக்கும் வகையில் இருந்ததாகவும். இது தொடர்பாக பேருந்து உரிமையாளரிடம் முறையிட்ட போது, உன் புகழுக்காக பேருந்தை பயன்படுத்துகிறாயா எனதிட்டியதாகவும், இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு, பணியை விட முடிவு செய்துள்ளதாகவும் ஷர்மிளா கூறியுள்ளார்.

முன்னதாக ஷர்மிளா இணையதளங்களில் வைரலாகி வந்த நிலையில் பல்வேறு அரசியல் பிரபலங்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இன்று(23.06.2023), திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று காலை ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணம் செய்து அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். மேலும் பேருந்தில் பயணித்த பெண்களிடமும் உரையாடினார்.

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு பகுதி வரை பயணித்த அவர் ஷர்மிளாவிற்கு கைக்கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது, "பொதுவாகவே ஆண்களும், பெண்களும் சமம் என்று கூறும் பொழுது, பலரும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பேருந்து ஓட்டுவார்களா? லாரி ஓட்டுவார்களா? என்று அர்த்தமற்ற கேள்விகளை எல்லாம் கேட்பார்கள். ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு பெண் தங்களால் பேருந்தும் ஓட்ட முடியும் என்று காட்டியது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக உள்ளது.

முன்னதாகவே ஷர்மிளாவிடம் இதுகுறித்து செல்போனில் பேசியபோது அவர் கோவைக்கு வந்தால் தன்னை வந்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது நானும் கோவை வந்தால் கண்டிப்பாக பேருந்தில் பயணிப்பேன் என்று கூறியிருந்தேன். அதன் படி இன்று அவருடன் பயணித்திருக்கிறேன் இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒரு தளத்தில் இணைந்து மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. அது நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் நான் காத்திருக்கிறேன்" என தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து பேசிய பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா கூறியபோது, "பேருந்து ஓட்டும் பொழுது அவருடன் அதிகமாக பேச முடியாததால் பீளமேட்டில் இறங்கி தன்னுடன் பேசினார். என்ன உதவி வேண்டுமானாலும் தாங்கள் செய்து தருவதாகவும் கூறினார். இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு முன்னர் வானதி சீனிவாசன் எதுவும் சொல்லாமல் வந்து தனக்கு சர்ப்ரைஸ் அளித்தார்.

ஆனால் கனிமொழி அவர்கள் வருவதாக ஏற்கனவே தெரிவித்து தற்போது வந்துள்ளார். அவரை தன்னுடன் பேருந்தில் பேசவே விடாமல் இதர பயணிகள் அவருடன் பேசிக்கொண்டு இருந்தார்கள் எனவே தன்னுடன் பேச வேண்டும் என்று இறங்கி இருவரும் பேசினோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: PM Modi US Visit: பாதுகாப்பில் இந்தியாவுடன் கைகோர்த்த அமெரிக்கா!

Last Updated : Jun 23, 2023, 2:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details