கோயம்புத்தூர்: தக்காளிக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரியும், தக்காளி விவசாயிகளை பாதுகாக்க குளிர் பதன சேமிப்புக் கிடங்கு அமைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி உள்ளிட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மழையால் சேதமடைந்த தக்காளி செடிகளையும், அழுகிய தக்காளிகளையும் கொட்டினர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த தக்காளிகளை பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கினர்.
இது குறித்து சு.பழனிசாமி கூறுகையில், தமிழ்நாட்டில் மூன்றாவது இடமாக கோவையில் தக்காளி மார்க்கெட் உள்ளது. தக்காளியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும்போது கிலோ ஆறு முதல் ஏழு ரூபாய் வரை கேட்கின்றனர். கடையில் 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு உரிய கூலி கிடைப்பதில்லை என்றார்.