கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட விவசாயிகள் அவர்களின் குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி அவர்களிடம் வழங்கினர்.
கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகளாக ”நெல் அறுவடை காலத்தில் பயிர்களில் நோய் தொற்று ஏற்படுகிறது. அதற்கு அரசு மருத்துவ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலும், காடுகளை காக்கும் நடவடிக்கைகள், யானைகளை கண்டறியும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும், உரக்கடத்தலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” போன்ற முக்கிய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுக்களாக அளித்தனர்.
விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மேலும் இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
இதையும் படிங்க: பாடங்களுடன் சேர்த்து காய்கறி வேளாண்மை பயிற்சி: அடடே முயற்சி!