மத்திய அரசு கொண்டு வரும் அவசர மின்சட்டத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று(ஜூலை 27) பல்வேறு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வாய்க்கால்பாளையம் கிராமத்தில் விவசாய சங்கம் , ஏர்முனை இளைஞர் அணி சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.