தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - வரைவு வாக்காளர் பட்டியல்

கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு. ராசாமணி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

draft voter list
draft voter list

By

Published : Dec 24, 2019, 12:42 PM IST

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும். அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, கோவை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'கோவை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 48 ஆயிரத்து 31 வாக்காளர்களும், 14 லட்சத்து 75 ஆயிரத்து 461 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 345 பேர் என மொத்தம் 29 லட்சத்து 23 ஆயிரத்து 837 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், ஜனவர் 1ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்து வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், பெயர் மாற்றம் செய்தவர்கள், பெயர்களைச் சேர்க்க விருப்பம் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு ஒரு மாத காலத்தில் இந்த குறைகளை நிவர்த்தி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

கோவை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

மேலும், ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்துள்ளவர்கள் இ-சேவை மையத்தில் 25 ரூபாய் பணம் கட்டி வாக்காளர் அடையாள அட்டையை வாங்கிக்கொள்ளலாம். இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நேர்மையான முறையில் தங்களது வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் கோவையில் இதுவரை எவ்வித சட்ட விதிமீறல்களும் நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details