தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி பண்டிகை: கோவையில் மக்கள் உற்சாகக் கொண்டாட்டம் - diwali festival celebration coimbatore

கோவை: புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர்.

coimbatore

By

Published : Oct 27, 2019, 12:06 PM IST

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையிலும் தீபாவளி சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டம்

அதிகாலையிலேயே எழுந்த பொதுமக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த நல்ல நாளில் வீடுகளில் இனிப்பு வகைகள், கார வகைகளான முறுக்கு, அதிரசம், தட்டை முறுக்கு போன்ற வகை வகையான பலகாரங்களைத் தயார் செய்து உற்றார் உறவினருக்கு கொடுத்து மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

தீபாவளி: துணிக்கடை, பட்டாசுக் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details