தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. கரோனா தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. தினம்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைத் தாண்டுகிறது.
அந்த வகையில், கோவை மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 11) 324 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7ஆயிரத்து 296ஆக உயர்ந்துள்ளது.