கடந்தாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவில்லை. மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மனு பெட்டிகளுக்குள்ளேயே மனுக்களை போட்டு சென்றனர். இந்நிலையில், 10 மாதங்கள் கழித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் நேரடியாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு நேரடியாக மக்களிடம் மனுக்களை பெற்றார்.
மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர்...!
கோயம்புத்தூர்: பத்து மாதங்களுக்கு பின் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்களை வாங்கினார்.
District Collector
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தகுந்த இடைவெளியை பின்பற்றும் வகையில் வட்டங்கள் போடப்பட்டு மக்கள் வரிசையில் வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கிருமி நாசினிகள் போன்றவையும் வைக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்களை அழித்தது மகிழ்ச்சியாக உள்ளதென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.