தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு: 5 பேர் மீது குண்டர் சட்டம் - சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு

பொள்ளாச்சியில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

v
v

By

Published : Nov 1, 2021, 4:59 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி உடுமலை சாலை அருகே கடந்த சில மாதங்களுக்கு முன் 14 வயது சிறுமியை சிலர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

இது தொடர்பாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் மாரிமுத்து மகன் மகரஜோதி (31) உள்ளிட்ட 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் ஐந்து பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சமீரான் 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து ஐந்து பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குண்டர் சட்டம் காரணமாக கல்யாணராமன் ஜாமீன் மனு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details