தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Padma award 2024: பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு... கடைசி தேதி என்ன தெரியுமா? - கோயம்புத்தூர் செய்திகள்

கோவையில் உள்ள மக்கள் 2024 ஆண்டிற்கான பத்ம விருதிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Padma award 2024
பத்ம விருது 2024

By

Published : Jul 3, 2023, 3:24 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் பலதரப்பட்ட துறைகளைக் சார்ந்தவர்கள் அந்தந்த துறைகளில் செய்த சிறப்புமிக்க சேவைகளை பாராட்டும் விதமாக 2024ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள "Padma Award 2024" விருதை பெற மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசால் பத்ம விருது (Padma Award) 2024 விருது 2024ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இதில் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி அறிவியல் மற்றும் பொறியியல், பொதுவிவகாரங்கள், சிவில் சேவைகள், வர்த்தகம் மற்றும் தொழிற்துறை போன்ற அனைத்து துறைகளிலும், சிறந்த சாதனைகள் மற்றும் சிறப்பு மிக்க சேவைகளை செய்தவர்களில் இனம், தொழில், பதவி மற்றும் பாலின வேறுபாடுகள் இன்றி அனைத்து நபர்களும் இந்த விருதிற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கோவை மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருது - 2024 என்ற விருது பெறத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுகின்றன. மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளைத் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உட்பட அரசு ஊழியர்கள் பத்ம விருதிற்குத் தகுதியற்றவர்கள் ஆவார்.

எனவே, கோவை மாவட்டத்தைச் சார்ந்த தகுதியான நபர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று வருகின்றன. மேலும் வரும் 10ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விவசாயப்பணிகள் செய்ய ரூ.7 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கும் விவசாயி!

ABOUT THE AUTHOR

...view details