கோவை:கோவை மாவட்டம் முழுவதும் கடந்த இரு தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கோவை மாநகரில் உள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பி காணப்படுகிறது. ராஜவாய்க்கால் தடுப்பணையில் நீர் நிரம்பியுள்ளது.
இந்நிலையில் கோவையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இன்று பொதுமக்கள் கோவை குற்றாலம் செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகளுக்குத்தடை
வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
Flooding at Coimbatore Courtalam Falls and Denial of entry to tourists
இந்த தற்காலிகத் தடை வெள்ளப்பெருக்கு குறையும் வரை நீடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சாதாரண மனிதராக எனது மகள், கணவருடன் வாழ விரும்புகிறேன் - நளினி