தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை ராகிங் விவகாரம்; 7 மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவு! - பிஎஸ்ஜி கல்லூரி ராக்கிங்

Coimbatore College Ragging: கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் மாணவர் ராகிங் செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 7 மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராகிங்கில்  ஈடுபட்ட 7 மாணவர்களுக்கு  ஜாமீன் அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவு
ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்களுக்கு ஜாமீன் அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 10:11 AM IST

Updated : Nov 17, 2023, 11:02 AM IST

கோயம்புத்தூர்:கோவை அவினாசி சாலை பீளமேடு பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் திருப்பூர் ராயர்பாளையத்தைச் சேர்ந்த மாணவரை, கடந்த நவம்பர் 6ஆம் தேதி அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இரண்டாம் ஆண்டு படிக்கும் அம்மாணவர் கல்லூரி விடுதி அறையில் இருந்த நேரத்தில் எட்டு சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவரிடம் மது அருந்த பணம் கேட்டும், மொட்டை அடித்து ரேகிங் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் அந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் எட்டு மாணவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் ஒரு மாணவரைத் தவிர மற்ற ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தீபாவளி விடுமுறைக்குப் பின்னர் புதன்கிழமை நீதிமன்றம் திறக்கப்பட்டபோது, மாணவர்கள் ஏழு பேர் தரப்பில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கோவை 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், 7 மாணவர்களுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், 7 மாணவர்களும் அவரவர் சொந்த ஊர்களில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று 30 நாட்களுக்கு தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இதனிடையே
முக்கிய விடுபட்ட ஒரு மாணவரைப் பிடிப்பதற்கு இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை.. தீபாவளியை முடித்துவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Last Updated : Nov 17, 2023, 11:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details