ஒரே வாரத்தில் 701 டன் குப்பைகள் அகற்றம் - கோவை மாநகராட்சி நிர்வாகம் - கோவை மாநகராட்சி நிர்வாகம்
ஒரு வார காலத்தில் இவ்வளவு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது நல்ல செயலாயினும், இவ்வளவு குப்பைகள் இருந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை: மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் ஏழு நாட்கள் நடைபெற்ற தூய்மை பணிகளில் மொத்தம் 701.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஐந்து மண்டலங்களில் கடந்த 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 105 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப் பணிகளில், கிழக்கு மண்டலத்தில் 222 டன், தெற்கு மண்டலத்தில் 70 டன், மேற்கு மண்டலத்தில் 138 டன், வடக்கு மண்டலத்தில் 172 டன், மத்திய மண்டலத்தில் 99.5 டன் என மொத்தமாக 701.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் ஒரு வார காலத்தில் இவ்வளவு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது நல்ல செயலாயினும், இவ்வளவு குப்பைகள் இருந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.