தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேர்காணலுக்கு ஒருநாள் முன் தபால்; சந்தேகமடைந்த விண்ணப்பதாரர்கள்! - நேர்காணல்

கோவை: துப்புரவு பணியாளர் காலிப்பணியிடங்களுக்காக இன்று நடைபெறும் நேர்காணலுக்கு வருமாறு நேற்று இரவு 7:30 மணிக்கு மேல் தபால் கொடுத்ததால் விண்ணப்பதாரர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore Corporation Job Issue
Coimbatore Corporation Job Issue

By

Published : Nov 27, 2019, 12:32 PM IST

கோவை மாநகராட்சியில் 549 துப்புரவு பணியாளர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப்பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி ஆணையர் சார்பாக, அக்டோபர் மாதம் 30ஆம் தேதி அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, கோவை மாவட்டம் முழுவதும் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் துப்புரவு பணியாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பித்தனர். தமிழ் எழுத படிக்கத்தெரிந்தால் போதும் என்ற நிலையில், 8ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் படித்தவர்கள் வரை விண்ணப்பித்தனர்.

கோவை மாநகராட்சி வெளியிட்ட பத்திரிகை செய்தி

இந்நிலையில், நாளை மதியம் (இன்று) 3.30 மணியளவில் துப்புரவு பணியாளர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு நேரடி நியமனம் வழங்கப்பட இருக்கிறது. நேர்காணலில் கலந்துகொள்ள விண்ணப்பித்தவர்களுக்கான கடிதத்தை உக்கடம் பகுதியில் நேற்று இரவு 7.30 மணிக்கு மேல் தபால்காரர் வழங்கினார்.

நேர்காணலுக்கான கடிதம்

இந்த நேர்காணலுக்கு பள்ளி தகுதி சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ்கள், விண்ணப்பதாரரின் வயது சான்றிதழ், உரிய மருத்துவ அலுவலரின் சான்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த அடையாள அட்டை, அரசு அலுவலர்களிடமிருந்து நன்னடத்தை சான்றிதழ், முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் பெற உரிய அலுவலர்களின் ஒப்புதல் சான்றிதழ் ஆகியவைகளை கட்டாயம் நேர்காணலுக்கு விண்ணப்பதாரர் கொண்டு வரவேண்டும்.

மாநகராட்சியால் பொதுமக்கள் சந்தேகம்

மாநகராட்சி நிர்வாகம் நாளை (இன்று) நடைபெறும் நேர்காணலுக்கு போதிய அவகாசம் கொடுக்காமல், தாமதமாக நேர்காணலுக்கு வரச்சொல்லி கடிதம் வழங்கி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 549 பதவிகளுக்கும் இன்று நடைபெறும் நேர்காணலை ரத்து செய்து விட்டு, கால அவகாசம் வழங்க வேண்டுமென, உக்கடம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கஞ்சா செடி!

ABOUT THE AUTHOR

...view details