கோயம்புத்தூர்:தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வென்றுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது மட்டுமல்லாமல் நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் பெருவாரியான வார்டுகளை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியிருக்கிறது.
இதேபோல, கோவையில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றிபெற்றனர். இதனையடுத்து வெற்றி பெற்றவர்கள் இன்று மாநகராட்சி கவுன்சிலர்களாகவும் நகராட்சி கவுன்சிலர்களாகவும், பேரூராட்சி கவுன்சிலர்களாகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
கோவை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா கோவை மாநகராட்சியில் விரிவுபடுத்தப்பட்ட 100 வார்டுகளில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) இன்று (மார்ச்.2) காலை டவுன்ஹாலில் உள்ள விக்டோரியா ஹாலில் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்குக் கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்காரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கோவை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இதில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் 73 பேரும், காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் 9 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் 4 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் 4 பேரும், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் 3 பேரும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் 2 பேரும், மனிதநேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர் ஒருவர், எஸ்டிபிஐ மாமன்ற உறுப்பினர் ஒருவர் என அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதனிடையே கோவை மாநகராட்சியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாமன்ற உறுப்பினர்களின்உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்படுவதாகக்கூறி பதவி ஏற்றுக்கொண்டனர். இதில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரையும் முதலமைச்சர் ஸ்டாலின் பெயரையும்கூறி பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். முன்னதாக மாமன்ற கூட்ட அரங்கில் பதவியேற்கும் உறுப்பினர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
மாமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள், பொதுமக்கள் பதவியேற்பு விழாவைப் பார்க்கும் வகையில் மாநகராட்சி வளாகத்தில் எல்இடி திரை அமைக்கப்பட்டது. மேலும் கோவை மாநகராட்சி யூ-ட்யூப் பக்கத்தில் பதவிப்பிரமாணம் நேரலை செய்யப்பட்டது. பதவியேற்ற 100 கவுன்சிலர்களில் 93 பேர் மன்றத்திற்குப் புதியவர்களாக உள்ளனர். 7 பேர் ஏற்கெனவே கவுன்சிலராக இருந்து அனுபவம் வாய்ந்தவர்கள். கோவை மாநகராட்சியில் 100 கவுன்சிலர்களில் 55 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாமன்ற உறுப்பினர்களுக்கு விக்டோரியா ஹாலில் பதவிப் பிரமாணம் இதையும் படிங்க: ஸ்டாலினின் நல்லாட்சிக்கு அடித்தளம் அண்ணாவின் கனிவே, கலைஞரின் துணிவே: திமுக சிறப்புப் பட்டிமன்றம்