கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று 213 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்து 889 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெற்றுவந்த 213 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 317 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 572 ஆக உயர்ந்துள்ளது.
கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனா தொற்றுக்காகச் சிகிச்சை பெற்றுவந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது குழந்தைக்கு MIS-C என்ற நோய் (அதிக காய்ச்சல், கழுத்தில் நெறி கட்டுதல், வாய்ப்புண், கை கால் வீக்கம்) இருப்பது தெரியவந்தது. இதனைச் சரிசெய்ய இம்யூனோகுலோபின் (Immunoglobulin) என்ற 1.25 லட்சம் மதிப்புள்ள ஊசி தேவைப்பட்டது.