கோயம்புத்தூர்:கடந்த 1998ஆம் ஆண்டு கோவையின் பல்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதேநேரம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில், கோவை உக்கடத்தைச் சேர்ந்த அபுதாகிர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி மதுரை ஜெயில் துணை வார்டன் ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் அபுதாகிருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.