தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நோயாளிகளுக்கு யோகா: நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் - Coimbatore Collector visited the yoga training provided to corona patients

கோவை: சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவை கொடிசியா வளாகத்தில் கரோனா நோயாளிகளுக்கு கற்றுத் தரப்படும் யோகாசன பயிற்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டார்.

Coimbatore Collector visited the yoga training provided to corona patients
Coimbatore Collector visited the yoga training provided to corona patients

By

Published : Jun 21, 2021, 9:03 PM IST

சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவை கொடிசியா வளாகத்தில் ஆயுர்வேதம் மற்றும் மருத்துவக் குழுவினருடன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு யோகாசன பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதனை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடினார்.

தமிழ்நாடு அரசு நேற்றைய தினம் மூன்று வகையாகப் பிரித்து ஊரடங்குத் தளர்வுகளை நீட்டித்து உத்தரவிட்டது. இதில் கோவை மாவட்டத்திற்கு எந்தவித தளர்வுகளின்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த ஊரடங்கு ஒருவாரத்திற்கு கடைப்பிடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details