தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு(Fssai) வாகனம் - ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்

கோவையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகன சேவையை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

a
a

By

Published : Jan 30, 2023, 1:07 PM IST

கோயம்புத்தூர்:தமிழ்நாட்டில் பல உணவகங்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில் அதனைத் தடுக்கும் பொருட்டு 'தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத் துறை' சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துக்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் துவக்கி வைத்தார்.

கோவை,சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இந்த வாகனங்கள் தரப்பட்டுள்ளன. அதன்படி கோவையில் இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வாக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் உட்பட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த நடமாடும் பகுப்பாய்வும் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தின் மூலம் 30 வகையான உணவுப் பொருட்களில் கலப்படங்களைக் கண்டறியும் வசதிகள் மற்றும் கலப்படம் குறித்த விளக்கப் படங்கள் உள்ளதாகவும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் உணவு பாதுகாப்புத் துறைக்குப் புகார் தெரிவிப்பதற்காக பிரத்யேக வாட்ஸ்ஆப் எண் 9444042322 உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஊராட்சி குறித்து போலியான செய்தி - தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க மக்கள் புகார்

ABOUT THE AUTHOR

...view details