தமிழ்நாடு

tamil nadu

மழைநீர் அனைத்தும் நீர்நிலைகளுக்குச் சென்றடையும் வகையில் நடவடிக்கை - கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 1:28 PM IST

Coimbatore collector news: கோவையில் மழை நீர் அனைத்தும் குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு சென்றடையும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்தார்.

Coimbatore news
கோவை செய்திகள்

கோவை மாவட்ட ஆட்சியர் பேட்டி

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி நிர்வாகம் ரேஸ் கோர்ஸ் மற்றும் சுங்கம் பகுதியில் தனியார் (GKNM Hospital) மருத்துவமனை பங்களிப்புடன், தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் குதிரை பந்தயம் மற்றும் ரேக்ளா பந்தயத்தின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று அந்த 2 சிலைகளையும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, “இந்த சிலைகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். நமது வரலாற்றை பறைசாற்றும் வகையிலும், பொதுமக்கள் பார்வைக்கு அழகாகவும் இருக்கும். தனியார் பங்களிப்புடன் இவை அமைக்கப்பட்டுள்ளதால், பராமரிப்பு பணிகள் அனைத்தையும் தனியார் அமைப்பினர் பார்த்துக் கொள்வார்கள்.

கோவையில் குதிரைப் பந்தயம் மற்றும் ரேக்ளா பந்தயங்கள் நடைபெறுவதை பறைசாற்றும் வகையில், இந்த இரண்டு சிலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மாநகரில் சிக்னல்களை எடுத்துவிட்டு ரவுண்டானாக்களை அதிகாரித்து வருவதால், போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது போன்ற சிலைகள் மக்களின் பார்வைக்கு அழகான ஒன்றாக அமையும்” என்றார்.

இதைத் தொடர்ந்து, குறிச்சி பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலை இன்னும் சில நாட்களில் திறக்கப்படும் என தெரிவித்தார். மேலும் மழை வரும் பொழுது, சில இடங்களில் நீர்வழிப் பாதைகள் சுத்தமாக இல்லாததால், குளங்களுக்குச் சென்றடையாமல் இருப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், “நீர்வழிப் பாதைகள் அனைத்தையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் பல்வேறு அமைப்புகள் நேரடியாக கள ஆய்வு செய்துள்ளது.

இந்த ஆண்டு நன்கு மழை பெய்ததால், அனைத்து குளங்களும் ஏறத்தாழ நிரம்பி உள்ளது. இனி வரும் நாட்களில் மழை நீர் அனைத்தும் குளங்கள், ஏரிகளுக்குச் சென்றடையும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வரலாறு காணாத அளவு உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

ABOUT THE AUTHOR

...view details