கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆறு மாதங்களாக சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும் ஊரடங்கு தமிழ்நாடு அரசு தளர்வுகள் அறிவித்தவுடன், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வால்பாறைக்கு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வால்பாறை சென்றனர்.
அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் கரோனா பரவல் அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்தது. இந்தச் சூழ்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவின் பெயரில் வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால் சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகள் பரிசோதனையும் செய்யும் நகராட்சி ஊழியர்கள், இ பாஸை வைத்திருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கின்றனர். இ-பாஸ் இல்லாத சுற்றுலா பயணிகள் சோதனை சாவடியிலேயே திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.