தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநங்கையர் முன்மாதிரி விருது 2023: கோவை ஆட்சியர் அறிவிப்பு! - eligibility of transgender award 2023

திருங்கையர் முன்மாதிரி விருதுக்கான கருத்துரு வரவேற்கப்படுவதாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

திருநங்கையர் முன்மாதிரி விருது 2023க்கு கருத்துருக்கள் வரவேற்பு
திருநங்கையர் முன்மாதிரி விருது 2023க்கு கருத்துருக்கள் வரவேற்பு

By

Published : Feb 8, 2023, 1:16 PM IST

Updated : Feb 8, 2023, 2:45 PM IST

கோயம்புத்தூர்:திருங்கையர் முன்மாதிரி விருதுக்கான கருத்துரு வரவேற்கப்படுவதாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2023ஆம் ஆண்டு திருநங்கையர்களில் சிறப்பாக முன்னேறியவர்களில் ஒருவருக்கு முன் மாதிரி விருது திருங்கையர் தினமான ஏப்ரல் 15ஆம் தேதி வழங்குவதற்கு தகுதியான திருநங்கையர்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், இவ்விருதானது 1,00,000 லட்சம் காசோலை மற்றும் சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது.

2023ஆம் ஆண்டு திருநங்கையர் தின விருது வழங்கும் பொருட்டு திருநங்கையர்கள் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும், குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும், திருநங்கையர் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது உள்ளிட்டவை விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் திருநங்கையர்கள் உரிய கருத்துருக்களுடன் www.awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி உரிய வழிமுறைகளுடன் விருதிற்கான கருத்துருக்களை 28.02.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'அமைச்சர் சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும்' - வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை!

Last Updated : Feb 8, 2023, 2:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details