கோயம்புத்தூர்:நாடு முழுவதும் இன்று (ஆக.15) 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைநகர், அனைத்து மாநிலங்கள், மாவட்டங்களில் தேசியக் கொடியானது ஏற்றப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் கோயம்புத்தூரிலுள்ள வ.உ.சி மைதானத்தில் அம்மாவட்ட ஆட்சியர் சமீரன் தேசியக் கொடியை ஏற்றி, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து சமாதான புறாக்களை பறக்கவிட்டார்.
கரோனாவால் கலை நிகழ்ச்சி இல்லை
இதையடுத்து சிறப்பாகப் பணியாற்றிய காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள் என மொத்தம் 350 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர். கரோனா காரணமாக பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை.
இதையும் படிங்க: ’தமிழ்நாட்டில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது’ - மு.க. ஸ்டாலின்