தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

cloth bag campaign: மஞ்சப்பை விழிப்புணர்வு

cloth bag campaign: மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையைச் சேர்ந்த பொற்கொல்லர் தங்கத்தில் துணிப்பை போன்று வடிவமைத்துள்ளார்.

பிளாஸ்டிக்குக்கு குட் பை
பிளாஸ்டிக்குக்கு குட் பை

By

Published : Dec 25, 2021, 5:43 PM IST

cloth bag campaign: சில தினங்களுக்கு முன்பு மக்கள் அனைவரும் மஞ்சப்பைகளை உபயோகிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். பின்னர் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் துணிப் பைகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த அரசின் விளம்பர புகைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கோவை செட்டி வீதி பகுதியை சேர்ந்த பொற்கொல்லர் மாரியப்பன் 200, 500 மில்லி கிராம் தங்கத்தால் துணிப்பை போன்று வடிவமைத்துள்ளார். அதில் 'மீண்டும் மஞ்சப்பை பிளாஸ்டிக்கிற்கு good bye' என்ற வாசகத்தை பொறித்துள்ளார்.

தங்கத்தினால் துணிப்பையை வடிவமைத்த பொற்கொல்லர்

இதுகுறித்து அவர் கூறுகையில், "பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும். அதனால் மண் வளத்திற்கும் உயிரினங்களுக்கும் தீங்கு விளைகிறது. எனவே மக்கள் அனைவரும் துணிப்பைகளை உபயோகிக்க வேண்டும். எனவே தங்கத்தில் துணிப்பை போன்று வடிவமைத்துள்ளேன்" என்றார்.

இதையும் படிங்க:TN weather : தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை!

ABOUT THE AUTHOR

...view details