கோவை:கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும்போது, குற்றவாளிகளை அடையாளம் காண காவல்துறையினருக்கு உதவியாக 'மோப்ப நாய்கள்' (sniffer dog) பயன்படுத்துவது வழக்கம். குற்றச்சம்பவம் நடைபெறும் இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கபட்டு அங்கு கிடைக்கும் தடயங்களை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகிறது.
நாயின் வேகத்திற்கு ஏற்ப ஓடும் வகையில் ஆண் காவலர்கள் மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளித்து கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக கோவை மாநகர காவல்துறையில் மோப்ப நாய்களை கையாள்வதற்காக இரு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், கவிப்பிரியா(25), பவானி(26) ஆகிய இரு பெண் போலீசார், தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். ஆறுமாதப் பயிற்சிக்குப் பிறகு, மோப்ப நாய்களைக் குற்ற சம்பவம் நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.
இதில் திருப்பூர் மாநகரில் உள்ள செல்லம் நகரைச் சேர்ந்த கவிப்பிரியா பிஎஸ்சி (இயற்பியல்), பிஎட், பிஏ (இந்தி) மற்றும் மனித வளத்தில் டிப்ளமோ படித்துள்ளார். காவலர் பவானி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பி.ஏ ஆங்கிலம் இலக்கியம் முடித்துள்ளார். கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் இருவரும் பயிற்சி பெற்றுள்ளனர். பயிற்சிக்குப் பிறகு, கோவை நகர ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வந்த நிலையில் இருவரும் இப்பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவலர் கவிப்பிரியா கூறுகையில், 'எனக்கு செல்லப்பிராணிகள் மிகவும் பிடிக்கும் பயிற்சியில் இருந்தபோது, கோவை மாநகரில் உள்ள துப்பறியும் நாய்ப் படை மற்றும் நாய்ப் பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் மோப்ப நாய்களை வரவழைத்து அவற்றின் திறன்களைக் காட்டினர்.