தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை சிறுமி மர்ம மரண விவகாரம்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி! - சிறுமி கொலை

கோவை: துடியலூரில் சடலமாக மீட்கபட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

உறவினர்கள் போராட்டம்

By

Published : Mar 27, 2019, 12:37 PM IST

கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியில் குடியிருந்து வருபவர்கள்பிரதீப்-வனிதா தம்பதி.துப்புறவு பணியாளர்களாக வேலை செய்து வரும் இவர்களுக்கு5 மற்றும் 7 வயதில் 2 பெண் பிள்ளைகள்உள்ளனர். இதில் 7 வயது சிறுமி அருகில் உள்ள திப்பனூர் அரசுப்பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் திங்கட்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

மாலை 6 மணி வரைசிறுமி வீட்டிற்கு வராததை கண்டு அதிர்ச்சியடைந்தபெற்றோர் அக்கம் பக்கம் உள்ளிட்டஅந்த பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காததைத் தொடர்ந்து தடாகம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துதேடிவந்த நிலையில்,நேற்று காலை 7.30 மணியளவில் காணாமல் போன சிறுமி அந்த பகுதியில் உள்ள முட்டு சந்தில் துணியில் சுற்றிய நிலையில் சடலமாக கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்குதகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோலீசார், உடல் முழுவதும் காயங்களுடன்இறந்த நிலையில் கிடந்தசிறுமியின் உடலைமீட்டுஉடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு நடைபெற்றபிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுமி கொலை வழக்குடன் போக்சோ பிரிவும் சேர்க்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க 4 ஆய்வாளர்கள், 6 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சிறுமி வீட்டின் அருகே வசித்து வரும் இளைஞர் ஒருவரை பிடித்துவிசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று வழக்கை மகளிர் காவல்துறைக்கு மாற்றி மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே சிறுமி கொலை வழக்கில் தொடர்புடை.ய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி துடியலூர்- மேட்டுப்பாளையம் சாலையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details