தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை கார் வெடித்து விபத்து... ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு... - ADGP Thamaraikannan

கோவை கோட்டைமேடு பகுதியில் கார் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது தொடர்பாக, ஏடிஜிபி தாமரைக்கண்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கார் வெடித்து விபத்து.. ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு
கோவை: கார் வெடித்து விபத்து.. ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு

By

Published : Oct 23, 2022, 12:14 PM IST

கோயம்புத்தூர்: கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன்பு இன்று (அக் 23) அதிகாலை கார் வெடித்து சிதறியது. இதில் காரின் உள்ளே இருந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏடிஜிபி தாமரைக்கண்னன், “இன்று காலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் மாருதி 800 காரில் இருந்த சிலிண்டர் வெடித்துள்ளது.

இதில் காரை ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு உள்ள சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதனால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தடய அறிவியல் துறையில் உள்ள உயர் அலுவலர்கள், சம்பவ இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். காரின் உள்ளே ஒரு சிலிண்டர் இருந்துள்ளது. கார் முழுவதும் சேதமடைந்துள்ளது. காவல்துறையினரின் தீவிர விசாரணையில் முழு விவரமும் தெரிய வரும். இன்று மாலை இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு முழு விவரங்கள் தெரிவிக்கப்படும்” என கூறினார்.

இதையும் படிங்க:கோவையில் வெடித்து சிதறிய கார்... ஒருவர் உயிரிழப்பு... டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு...

ABOUT THE AUTHOR

...view details