தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை கார் வெடிப்பு சம்பவம்; 5 பேருக்கு வரும் நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் - நீதிமன்ற காவல்

கோவை கார் வெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு வரும் நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்ற காவல்
கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்ற காவல்

By

Published : Oct 28, 2022, 9:02 PM IST

கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியில் 23ஆம் தேதி நடைபெற்ற கார் வெடிப்புச்சம்பவத்தில் முதலாவதாக கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல் வழங்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து ஐந்து பேரையும் காவலில் எடுத்து மூன்று நாட்கள் விசாரணை நடத்திய பின்பு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கோவை கார் வெடிப்பு சம்பவம்; 5 பேருக்கு வரும் நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல்

அதனைத்தொடர்ந்து இதனை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்தோஷ், நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டதைத்தொடர்ந்து ஐந்து பேரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:கோவையில் கார் வெடிப்பு - என்.ஐ.ஏ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் உள்ள தகவல்கள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details