கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பகுதியில் நேற்று முன்தினம் (ஜூலை 29) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையில் கஞ்சா விற்ற 4 பேர் கைது - Kovai Latest News
கோயம்புத்தூர்: மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கடந்த இரண்டு நாள்களாக கஞ்சா விற்ற நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
![கோவையில் கஞ்சா விற்ற 4 பேர் கைது Coimbatore cannabis sale](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:34:32:1596164672-tn-cbe-01-kanja-arrest-photo-script-tn10027-31072020080637-3107f-1596162997-550.jpg)
Coimbatore cannabis sale
அதேபோல் நேற்று (ஜூலை 30) நள்ளிரவு கோவை செல்வபுரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.