கோவையில் இருந்து உதகைக்கு அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கோவை மேட்டுபாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் வழக்கமாக பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை முதல் குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கோவையில் அரசுப் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி! - 2019election
கோவை: கோவையில் இருந்து உதகைக்கு செல்ல போதிய அரசுப் பேருந்துகள் இயக்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளதோடு, வாக்களிக்க முடியாத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
Coimbatore bus issue
இது குறித்து பயணிகள் கூறுகையில், "ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இது வழக்கத்திற்கு மாறாக உள்ளது. மேலும் நாங்கள் வாக்குப்பதிவு செய்யமுடியாத நிலை உருவாகியுள்ளது.
இதுபோன்று, அரசு முறையான ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால் குழந்தைகள், பெரியவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்" எனத் தெரிவித்தார்.